எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி வாகன உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,
இந்த ஆண்டு மத்தியில் பேருந்து கட்டணத்தை கண்டிப்பாக திருத்த வேண்டும்.. ஏன் என்றால் பேருந்தின் விலை அதிகரித்துள்ளது.. எரிபொருளின் விலை குறைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் குறிப்பாக குறைந்தது முப்பது மடங்கு குறைக்க வேண்டும். நாங்கள் இப்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதிக அளவில் குறைக்கப்பட்டால், அந்த பலனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் .. என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
The post ஜூலைக்கு முன் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையேற்படலாம் appeared first on Daily Ceylon.