முன்னதாக ஜெமினி சப்ஸ்கிரைப்ர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ஜெமினி லைவ் AI அம்சம் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் கிடைக்கும் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. எனவே யூசர்கள் ஆண்ட்ராய்டு யூஸர்கள் தங்களுடைய சாதனங்களில் ஜெமினி லைவ் அம்சத்தை எனேபிள் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இது குறித்த சில முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.

இருவழி உரையாடல் அடங்கிய ஜெமினி லைவ் என்ற AI அம்சத்தை கூகுள் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. ஆரம்பத்தில் இந்த அம்சம் ஜெமினி அட்வான்ஸ்டு சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்று இருந்தது. ஆனால் தற்போது இந்த ஜெமினி லைவ் அம்சம் அனைத்து ஜெமினி யூஸர்களுக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது.

விளம்பரம்

இந்த அம்சத்தை எனேபிள் செய்வதன் மூலமாக யூசர்கள் தங்களுடைய சாதனங்களில் சாட்பாட்டுடன் நேரடியாக எதார்த்தமான உரையாடலில் ஈடுபடலாம். முன்னதாக இது அட்வான்ஸ்டு சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது.

ஜெமினி லைவ் அம்சத்தை ஆண்ட்ராய்டு போனில் எனேபிள் செய்வது எப்படி?

*முதலில் உங்களுடைய சாதனத்தில் உள்ள ஜெமினி அப்ளிகேஷனை திறந்து கொள்ளுங்கள்.

*அப்ளிகேஷனின் கீழ் வலது மூலையில் ஒரு புதிய வட்ட, அலை வடிவ ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.

*இப்போது ஹோல்ட் மற்றும் எண்டு பட்டன்கள் அடங்கிய விண்டோ ஒன்று ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.

விளம்பரம்

*உரையாடலை நிறைவு செய்ய நோட்டிபிகேஷனை தட்டுங்கள் அல்லது ‘ஸ்டாப்’ என்று சொன்னாலும் போதும்.

*உரையாடல் நிறைவடைந்ததும் நீங்கள் சொன்ன விஷயங்களை AI அம்சம் எழுத்து வடிவத்தில் கொடுக்கும்.

*உங்களுடைய அனைத்து உரையாடல்களின் வரலாற்றையும் இந்த அம்சம் பராமரிக்கிறது. இதன் மூலமாக யூசர்கள் தங்களது பழைய உரையாடல்களை தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

கூகுள் வழங்கிய அப்டேட்-ன் படி, இந்த அம்சமானது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக Nova – Calm and Mid-Range VoiceVega- Bright, Higher VoiceUrsa- Engaged, Mid-Range VoicePegasus – Engaged, Deeper VoiceOrbit- Energetic, Deeper VoiceLyra- Bright, Higher VoiceDipper- Engaged, Deeper VoiceOrion- Bright, Deeper VoiceCapella- British Accent, Higher VoiceEclipse Energetic- Mid-Range Voice போன்ற பத்து புதிய வாய்ஸ் மோடுகளை வழங்குகிறது. இந்த AI அம்சத்தை கடந்த மாதம் பிக்சல் 9 சீரிஸ் உடன் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

விளம்பரம்

ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு ஜெமினி AI அட்வான்ஸ்டு சப்ஸ்கிரிப்ஷனை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜெமினி லைவ் அம்சத்தை இலவசமாக வழங்குவதன் மூலமாக AI சாட் பாட் வழங்கும் உரையாடலின் தரத்தை சோதிப்பதற்கு அதிக உள்ளீடுகளை கூகுள் பெறவுள்ளது.

.



Source link