Last Updated:

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 2 மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

News18

கே.ஜி.எஃப் படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் ஜெயிலர் 2 படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் கமர்சியலாக மிகப் பெரும் வெற்றியை குவித்தது. இந்த திரைப்படம் சுமார் ரூ. 650 கோடிக்கும் அதிகமாக தகவல் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் படம் சுமாரான வரவேற்பை கொடுத்ததால் பின்னடைவை சந்தித்திருந்த இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படத்தின் மூலமாக அதிரடி கம்பேக்கை கொடுத்தார். விறுவிறுப்பான கதைக்களம், குடும்பங்கள் ரசிக்கும் காட்சிகள், துள்ளலான பாடல்கள், பின்னணி இசை என கமர்சியல் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 2 மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க – Sawadeeka… அனிருத்தின் ‘செலிபிரேஷன்’.. ‘விடாமுயற்சி’ பட முதல் பாடல் வெளியானது!

கூலி படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளார். இந்த படத்தினுடைய ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாக தகவல்கள் இன்று பரவியுள்ளன.



Source link