அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை பட குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகன் போன்று அஜித் இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

விளம்பரம்

இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி விட முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தீபாவளிக்கு வருவதாக முதலில் கூறப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளிவந்து கடைசியாக விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஷூட்டிங் முழுமை அடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

விளம்பரம்

இதற்கிடையே அஜித் நடித்துவரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – புதுச்சேரி அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் கூறிய பதில் இதோ

இந்நிலையில் விடாமுயற்சி படத்துடைய இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2 புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் அஜித் குமார் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஹீரோவை போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

.





Source link