கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.