போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதிவாதியான டயானா கமகே, தான் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இது குறித்த வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, வழக்கை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

The post டயனாவிற்கு எதிரான வழக்கு மார்ச் 5ம் திகதி விசாரணைக்கு appeared first on Daily Ceylon.



Source link