சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினாலோ, புதிய கரன்சிகளை உருவாக்க நினைத்தாலோ, அமெரிக்காவில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாது என்று அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா உடனான வர்த்தகத்திற்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலான அனைத்து வர்த்தகத்திற்கும் டாலர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், உலகளாவிய அந்நிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர் தோராயமாக 58 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம், சர்வதேச செலாவணி நிதியத்தில் அமெரிக்காவின் இந்த ஆதிக்கம் உலகின் பல நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.

விளம்பரம்

மேலும், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, தங்களுக்கு அடிபணியாத நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிப்பது சர்வசாதாரணம் ஆகி விடும் என்பது பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இதனால், தங்கள் நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்பது ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற வல்லரசு நாடுகளின் அச்சமாக மாறி உள்ளது.

குறிப்பாக அமெரிக்க டாலர்களை ஆயுதமாக்கி பிற நாடுகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால், சர்வதேச வங்கி நெட்வொர்க்கான SWIFT-க்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்க டாலரை நிராகரிக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கம் இல்லை என்ற போதிலும், இந்தியப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டிய தேவை தங்களுக்கும் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறியிருந்தார்.

“பக்தர்கள் கவனத்திற்கு“ – நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் 2025-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு தொடக்கம்.!


“பக்தர்கள் கவனத்திற்கு“ – நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் 2025-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு தொடக்கம்.!

இதற்கெல்லாம் தீர்வாக, சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளை பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக ரஷ்யாவின் கசான் நகரில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், டாலர் அல்லாத பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும், தங்கள் நாடுகளின் கரன்சிகளை உலக வர்த்தகத்தில் வலுப்படுத்துவது குறித்தும் பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்தன.

விளம்பரம்

இந்த செய்தி டொனால்ட் டிரம்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாட்டு கரன்சியை ஆதரித்தாலோ அல்லது புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த முயன்றாலோ, அமெரிக்காவில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :
“10 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேற்றிய நாடகத்தை டங்ஸ்டனிலும் திமுக செய்கிறது” – அண்ணாமலை விமர்சனம்

“அமெரிக்காவுக்கு குட்பை சொல்லிவிட்டு, வேறு எந்த நாட்டையாவது உறிஞ்சுவதற்கு முயற்சி செய்யுங்கள்” என்றும் காட்டமாக அவர் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிப்பை ஏற்பதாக பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்காவும், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களும் உத்தரவாதம் தரவேண்டும் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

.



Source link