ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்த பாட் கம்மின்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.

குழந்தை பிறந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்த இருக்கிறார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை… எங்கே? எப்படி பார்க்கலாம்?

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியில் இருந்து மீளும் வகையில் இந்தியா அணி விளையாடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித் போன்ற அதிரடி வீரர்கள் இந்த போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

விளம்பரம்
இந்தியாவில் பார்க்க வேண்டிய பட்ஜெட்டுக்கு ஏற்ற 11 இடங்கள்.!


இந்தியாவில் பார்க்க வேண்டிய பட்ஜெட்டுக்கு ஏற்ற 11 இடங்கள்.!

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் தொடர் வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும் என்பதால் இத்தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிளேயிங் 11:

கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், ஜூரல், நிதிஷ் ரெட்டி, சுந்தர், ஹர்ஷித், சிராஜ், பும்ரா

ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11:

நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

விளம்பரம்

.



Source link