Last Updated:

பிரீமியம் அனுபவத்தோடு கூடிய நலன் செயல்திறனையும் வழங்குகிறது.

News18

2024-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், இந்த மாதத்திலேயே பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா..? லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் மாடல்கள் பெரும்பாலான யூஸர்கள் எதிர்பார்க்கும் பல டாப்-ஆஃப்-லைன் அம்சங்களுடனும் வருகின்றன. இதுபோன்ற மொபைல்கள் காஸ்டலியாக இருந்தாலும் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் அம்சங்களை யூஸர்களுக்கு வழங்குகின்றன. சிறந்த ஃபிளாக்ஷிப் போன்களை வாங்க விரும்பினால் அதற்கான பட்டியல் இங்கே:

விவோ எக்ஸ்200 ப்ரோ 5ஜி:

ஐபோன் 16 பிளஸின் பேஸ் மாடலான 128GB வேரியன்ட்டை விட வெறும் ரூ.5,000 கூடுதல் விலையில், விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிவைஸான இது பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது, பிரீமியம் அனுபவத்தோடு கூடிய நலன் செயல்திறனையும் வழங்குகிறது. இந்த ஃபோனில் ஒரு அழகான 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த மொபைலில் Dimensity 9400 SoC ப்ராசஸர் உள்ளது, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 6,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இது ஒரு 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜுடன் வருகிறது. விவோ எக்ஸ் 200 ப்ரோவின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா உள்ளது, மேலும் பல்வேறு லைட்டிங் நிலைகளில் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது. இந்த ஃபோனில் உள்ள 200MP பெரிஸ்கோப் லென்ஸ் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.

ஐபோன் 16:

ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் இரண்டு மாடல்களுமே ஆப்பிள் நிறுவனத்தின் 3nm A18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன.ஐபோன் 15 ப்ரோ மற்றும் 16 ப்ரோ போன்களைப் போலவே ஸ்டாண்டர்ட் ஐபோன் 16 மாடலானது ஏஏஏ கேம்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. இதன் பின்புறம் இருக்கும் 48MP பிரைமரி கேமரா அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கிறது. மல்டிமீடியா கன்டென்டை அனுபவிக்க ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. ஐபோன் 16 பிளஸ் மாடலை பொறுத்தவரை யூஸர்கள் பெரிய ஸ்கிரீன் மற்றும் பேட்டரியை பெறுகிறார்கள் மற்றும் iOS 18 உடன், தடையற்ற யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சரியான நேரத்தில் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்கல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9:

கூகுள் பிக்சல் 9-ன் AMOLED டிஸ்ப்ளேவானது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது, இது மல்டிமீடியா பயன்பாட்டிற்கு ஏற்றது. இதில் டென்சர் ஜி4 சிப் செட் உள்ளதுமற்றும் 4,700mAh பேட்டரி நாள் முழுவதற்கும் தேவையான பேட்டரி லைஃபை அளிக்கிறது. ஒருபக்கம் சார்ஜிங் ஸ்பீட் சிறப்பாக இருக்கிறது (27W வயர்டு, 15W வயர்லெஸ்), மறுபக்கம் 50MP பிரைமரி ரியர் லென்ஸ் கொண்ட கேமரா சிஸ்டம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது. டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸிற்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 9 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜூடன் கூடிய சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.79,999 ஆகும்.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ 5ஜி:

விவோ நிறுவனத்தின் X Fold 3 Pro 5G மொபைல் 5,700mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் முறையே ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த மடிக்க கூடிய மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மற்றும் Zeiss கேமரா சிஸ்டம் சிறந்த அம்சங்களை யூஸர்களுக்கு வழங்குகிறது. இந்த மொபைலின் இன்னர் மற்றும் அவுட்டரில் 4,500nits பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனரைக் கொண்ட ஒரே மடிக்கக்கூடிய தொலைபேசி X Fold 3 Pro ஆகும். ரூ.1,59,999 என்ற விலையில் கிடைக்கும் Vivo X Fold 3 Pro மொபைல் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இருப்பினும் அமேசானில் பேங்க் கார்டு ஆஃபர்களுடன் ரூ. 1,47,999 விலையில் இந்த மொபைலை வாங்கலாம்.



Source link