பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது கம்யூனிட்டி சேல் ஈவன்ட்-ஐ (Community sale event) துவக்கி உள்ளது. OnePlus 12, OnePlus Nord 4, OnePlus Nord CE 4 மற்றும் பல பிரபலமான ஸ்மார்ட் ஃபோன் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த ஸ்பெஷல் சேல் ஈவன்ட்டானது கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்கி இருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 17 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த ஈவன்ட் விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பல பிளாட்ஃபார்ம்களில் விசிபிளாக இருக்கிறது. நிறுவனம் குறிப்பிட்டுள்ள்ள விவரங்களின்படி, OnePlus 12 மொபைலின் விலை ரூ.6,000 வரை குறைந்துள்ளது.
இது தவிர, இந்த மொபைலை ஐசிஐசிஐ பேங்க், ஒன்கார்டு மற்றும் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.7,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் யூஸர்கள் ரூ.3,000 தள்ளுபடி சலுகையை பெறுவார்கள். OnePlus 12 மொபைலானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.64,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபோல்டபில் மொபைலை வாங்க விரும்புவோரும் பெரும் தள்ளுபடியை பெற முடியும். OnePlus Open Apex எடிஷனை ஐசிஐசிஐ பேங்க், ஒன்கார்டு மற்றும் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.20,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
ஒன்பிளஸ் ஓபன் டிவைஸின் அசல் விலை ரூ.1,49,990 ஆகும். மேலும் OnePlus கம்யூனிட்டி சேல் ஈவன்ட்டில் OnePlus Nord CE 4 மொபைலுக்கு ரூ.2,000 ஃபிளாட் டிஸ்கவுண்ட் மற்றும் OnePlus Nord 4 மொபைலுக்கு ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு மிட்-ரேஞ்ச் மொபைல்களும் கூடுதல் பேங்க் கார்ட் டிஸ்கவுண்ட் ஆஃபர்களுடன் கிடைக்கும். Nord CE 4 மொபைலை வாங்குபவர்கள் ICICI, OneCard மற்றும் RBL பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுன்ட்டை. பெறுவார்கள். Nord 4 மொபைலை வாங்குவோர் ICICI, OneCard மற்றும் RBL பேங்க் கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுன்ட்டை பெறலாம்.
Nord CE 4 Lite மொபைலை பொறுத்தவரை, இது ரூ. 2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரூ.1,000 வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஈவன்ட்டில் தனது டேப்லெட்டுகள் மற்றும் வயர்லெஸ் இயர்போன்களுக்கும் டீல்ஸ்களை வழங்குகிறது. OnePlus Pad 2-வின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் Pad Go-விற்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்டுகிறது. பேட் 2 வாங்கினால் ரூ.3,000 மற்றும் Pad Go மீது ரூ.2,000 கூடுதல் வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதே போல ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 விலை ரூ.1,000 குறைந்துள்ளது, மேலும் ஐசிஐசிஐ வங்கி, ஒன் கார்டு மற்றும் ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 கூடுதல் வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
.