ரியூசன் வகுப்புகளை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுபற்றித் தெரிவித்த அவர்;
எதிர்காலத்தில்,கல்வித்துறையில் விரிவான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்.இதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை விஞ்ஞாபனத்தில் கல்வித்துறையை நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க முறையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். கல்வி தொடர்பான மாற்றங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயற்படுகிறது.
துறைசார்ந்த முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான நிரந்தர தீர்மானம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post டியூசன் வகுப்புகளை தடை செய்யும் தீர்மானம் எதுவும் அரசிடம் இல்லை appeared first on Thinakaran.