Last Updated:
Donald Trump | ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் 10ஆம் தேதி தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வரும் 10ஆம் தேதி தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
அமெரிக்காவில் ஆபாசப்பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கும் டிரம்புக்கும் இடையே முன்னர் உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியில் கூறாமல் இருக்க, டிரம்ப் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Also Read: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!
இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப், வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான், டிரம்புக்கு இந்த பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால் டிரம்பின் குடியரசு கட்சி அதிர்ச்சியில் உள்ளது. இதை எதிர்த்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், வரும் 10ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு, டிரம்ப் நேரிலோ அல்லது நடைமுறையிலோ ஆஜராகலாம் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.தனது பதவிகாலம் முழுவதும் இந்த வழக்கு தன்னை தொடர்ந்தால், ஆளும் திறன் பாதிக்கப்படும் என்றும் இந்த வழக்கு அதிபர் விதிவிலக்கு மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியது என்றும் வாதிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
January 04, 2025 10:31 AM IST
Donald Trump: டிரம்புக்கு அடுத்த நெருக்கடி.. ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜன.10ல் தண்டனை அறிவிப்பு!