மிதமான மற்றும் சரியான நிதி திட்டமிடல் மூலம் உங்கள் டிராவல் ரிவார்டு புள்ளிகளை அதிகரிக்கலாம் மற்றும் கடன் தொல்லையில் சிக்குவதை தவிர்க்கலாம். அதிகமாக பயணம் செய்பவர்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் டிராவல் கிரெடிட் கார்கள், அடிக்கடி பயணிப்பவர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் ரிவார்டு புள்ளிகள் உட்பட தனித்துவமான சலுகைகளை வழங்குகின்றன.
சரியான திட்டமிடல் மற்றும் விருப்பங்களை ஒப்பிட்டு, செலவுகளை கவனமாக நிர்வகிப்பதன் மூலம், கடனை குறைக்க முடியும். அதுமட்டுமின்றி, ஆடம்பரமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில், பயணிகள் தங்கள் ரிவார்ட் புள்ளிகளையும் அதிகரிக்க முடியும்.
நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருப்பின் மற்றும் உங்களது செலவுகளில் குறிப்பிட்டவற்றை சேமிக்க விரும்பும் பட்சத்தில், டிராவல் கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையலாம். இந்த டிராவல் கிரெடிட் கார்டுகள், சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் வெகுமதி திட்டங்களைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கின்றன. இதன் மூலம் ஆடம்பரத்தில் சமரசம் செய்யாமல் உங்கள் பயணத்தை அனுபவிக்க முடியும்.
உங்கள் கிரெடிட் கார்டு மூலம் ரிவார்டு புள்ளிகளை எவ்வாறு அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்குள் ஆடம்பரமான பயண அனுபவத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
உங்கள் டிராவல் கிரெடிட் கார்டுகளின் மூலம் உங்கள் வெகுமதிகளை அதிகரிக்க, பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்:
சரியான டிராவல் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்
டிராவல் கிரெடிட் கார்டுகள் உங்கள் பயண முன்பதிவுகள் மற்றும் பலவற்றில் பிரத்யேக பலன்கள் மற்றும் வெகுமதிகளை உங்களுக்கு வழங்குகின்றன. கடன் வழங்குபவர்கள் வழங்கும் வெவ்வேறு கார்டுகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் தேவைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், டிராவல் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம், ஏனெனில் இந்த கார்டுகள் விமானங்கள், ஓய்வறைகள் மற்றும் ஹோட்டல்களில் பிரத்யேகமான பலன்களை உங்களுக்கு வழங்குகின்றன.
மாறாக, பயணம் செய்வது உங்களின் முதன்மையான குறிக்கோளாக இல்லாமல், அன்றாட செலவுகளுக்கு நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மற்ற பிற கிரெடிட் கார்டுகளை நீங்கள் பரிசீலிக்கலாம். இது உங்களுக்கு கேஷ்பேக் மற்றும் தினசரி பரிவர்த்தனைகளில் சிறந்த சலுகைகளை வழங்கும்.
சரியான நேரத்தில் உங்கள் ரிவார்ட் புள்ளிகளை பயன்படுத்துங்கள்
உங்களுக்கு கிடைத்த ரிவார்ட் புள்ளிகள் (reward points) மற்றும் அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றைக் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவற்றை நீங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும். பல ரிவார்டுகளுக்கு காலாவதி கிடையாது, எனவே பயன்படுத்தாத பட்சத்தில் அவை அடுத்த காலாண்டுக்கும் தொடரும். எனினும், ரிவார்டுகளுக்கு சில குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். எனவே, அவற்றை முன்பே பயன்படுத்த தவறும்பட்சத்தில் அவை காலாவதியாகலாம்.
சிறப்புச் சலுகைகளை கவனியுங்கள்
உங்களுக்காக வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட கால சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க, கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் பல்வேறு பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் இருப்பார்கள். எனவே, உங்கள் ரிவார்டுகளை அதிகரிக்க, கடன் வழங்குபவரால் தொடங்கப்பட்ட ஒப்பந்தங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் கால அளவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தச் சலுகைகளை உங்களது தேவைக்கேற்ப பயன்படுத்தி அதன் பலன்களைப் பெற முடியும்.
உங்கள் புள்ளிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
பல கிரெடிட் கார்டுகள், ரிவார்டு புள்ளிகளைப் பயன்படுத்தி உங்கள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்த அல்லது விமானம் அல்லது ஹோட்டல் முன்பதிவுக்கு அவற்றை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை உங்களுக்கு வழங்குகின்றன. எனவே, உங்கள் ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு முன், உங்கள் தேவை மற்றும் நிதி நிலைமையைப் புரிந்துகொள்வது முக்கியம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் புள்ளிகளை முன்பதிவுகளில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கலாம்.
இருப்பினும், சில காரணங்களால் உங்களால் கிரெடிட் கார்டு பில்லைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை அல்லது நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், நீங்கள் ரிவார்டு பாயிண்ட்டைப் பயன்படுத்தி அதனை திருப்பிச் செலுத்தலாம் மற்றும் கடன் தொல்லையிலிருந்தும் உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.
இதையும் படிக்க:
EPFO: ஆதார் OTP-ஐ பயன்படுத்தி UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!
பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்
உங்கள் கிரெடிட் கார்டு செலவு வரம்பை கட்டுப்படுத்துவதை விட சிறந்தது எது? உங்கள் கிரெடிட் கார்டு பில்களைத் தொடர்ந்து சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். கடன் வழங்குபவர் உங்கள் செலவு மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்கிறார்கள்.
உங்கள் கிரெடிட் கார்டு பில்லை தவணைகளில் செலுத்துவதற்கு பதிலாக, ஒரே முறையில் செலுத்துவது நல்லது. ஏனெனில் இது அதிக வட்டி விகிதங்களை ஈர்க்கும் மற்றும் நீங்கள் உண்மையில் திருப்பிச் செலுத்தக்கூடிய அதிக கடனுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கிரெடிட் கார்டை எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்த, உங்கள் கிரெடிட் கார்டு பில்லை திருப்பிச் செலுத்துவதில் தவறாமல் இருக்க வேண்டும் மற்றும் கடன் வழங்குபவரிடம் நற்பெயரை உருவாக்க வேண்டும்.
இதையும் படிக்க:
Elon Musk | உலகின் பெரும் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்: எகிறிய சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?
கவனமாக இருங்கள்
ரிவார்டு புள்ளிகள் உண்மையில் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். இருப்பினும், இது உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து அதிகபடியான செலவுகளுக்கு வழிவகுக்கும், இது உங்களுக்கு ஒரு கெட்ட கனவாக முடியவும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் செலவுகளை நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதிகமாக செலவு செய்து கடன் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும். மிதமான மற்றும் சரியான நிதி திட்டமிடல் மூலம் உங்கள் டிராவல் ரிவார்டு புள்ளிகளை அதிகரிக்கலாம் மற்றும் கடன் தொல்லையில் சிக்குவதைத் தவிர்க்கலாம்.
.