அமோலெட் டிஸ்ப்ளேக்களில் வரும் பயங்கரமான சிக்கல்களை சரிசெய்வதாக ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ள நிலையில், அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வாழ்நாள் உத்தரவாதத்தையும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று டிஸ்பிளேவில் ஏற்படும் க்ரீன் லைன். இந்த பிரச்சனையை சரிசெய்ய ஒன்பிளஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது மற்றும் இந்த சிக்கலை எதிர்கொள்ளும் ஒன்பிளஸ் மாடலுக்கு வாழ்நாள் உத்தரவாதத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்கள், பழைய மாடலை வைத்திருந்தாலும் சரி அல்லது சமீபத்திய புதிய மாடல்களை வைத்திருந்தாலும் சரி அவர்களது ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயில் பிரச்சனை வருமாயின், அதற்கு வாழ்நாள் உத்தரவாதம் வழங்குவதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குறிப்பிட்ட பயனர்கள் அமோலெட் டிஸ்ப்ளேயின் கிரீன் லைன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஸ்மார்ட்போனை அப்டேட் செய்த பிறகு தான், பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சிக்கலை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் அதன் சேவை மையத்தை அணுகி பிரச்சனைக்கான தீர்வை பெறலாம்.
ஒன்பிளஸ் க்ரீன் லைன் லைன்: என்ன காரணம்?
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் க்ரீன் லைன் பிரச்சனை பற்றிய செய்திகளை தான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நிறுவனம் இறுதியாக இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து இப்போது சில தடயங்களை வழங்கியுள்ளது. இந்தியாவில் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கிரீன் லைன் பிரச்சனையை எதிர்கொள்வதாக தெரிகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், அமோலெட் பேனல்கள் மட்டும் ஏன் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்ட புதிய மாடல்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகே மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எழாமல் இருப்பதை உறுதிசெய்வதாக நிறுவனம் வலியுறுத்துகிறது. மேலும், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அனைத்து மாடல்களுக்கும் வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்கியிருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் சிக்கலைச் சரிசெய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 11 போன்ற மாடல்களைக் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில், பெரும்பாலும் கிரீன் லைன் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. இந்த சிக்கலை எதிர்கொள்ளும் ஒன்பிளஸ் 12 பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பது அடுத்த மாதம் வரவிருக்கும் ஒன்பிளஸ் 13 வெளியீட்டிற்கு நல்லது.
கிரீன் லைன் சிக்கலைச் சரிசெய்வதாக உறுதி:
தற்போதுள்ள பயனர்களுக்கு ஆதரவை வழங்குவதோடு, ஒன்பிளஸ் இந்த சிக்கலை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. “எங்கள் கிரீன் லைன் வொர்ரி-ஃப்ரீ தீர்வின் முக்கிய அங்கமாக பிவிஎக்ஸ் (PVX) மேம்படுத்தப்பட்ட எட்ஜ் பிணைப்பு அடுக்குடன், ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஒன்பிளஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:
Redmi Buds: IP54 ரேட்டிங், ANC டெக்னாலஜி… ரெட்மி இயர்பட்ஸ் 6-ன் விலை எவ்வளவு தெரியுமா?
நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களில் அமோலெட் பேனல்களுடன், மேம்படுத்தப்பட்ட பிணைப்பு அடுக்கை ஒருங்கிணைக்கிறது, இது காலப்போக்கில் ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜன் ஊடுருவலை மெதுவாக்குவதாகக் கூறப்படுகிறது, இது டிஸ்ப்ளேயின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. ஒன்பிளஸ், சந்தையில் தனது இடத்தை இழக்க ஆரம்பித்துள்ளது மற்றும் பல்வேறு காரணங்களால் இந்தியாவில் அதன் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் அதன் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் நிறுவனம் தனது தயாரிப்புகளை மக்கள் தொடர்ந்து வாங்குவதற்கும், சரியான ஆதரவைப் பெறுவதற்கும் உதவ வேண்டும்.
.