புது டெல்லியின் முக்கிய பகுதியான லுட்யன்ஸ் டெல்லி அழகிய ராஷ்டிரபதி பவன், அதன் பூங்கா மற்றும் ஒரு உயர்மட்ட முதன்மையாக குடியிருப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அங்குதான், இந்தியாவின் பிரமாண்டமான பாராளுமன்றம் மற்றும் அதன் அருகாமையில் அருங்காட்சியகம், மகாத்மா காந்தி சிலை மற்றும் ஒரு சில காபி கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களும் இடம்பெற்றுள்ளன.

டெல்லியின் இத்தகைய முக்கிய பகுதியான லுட்யன்ஸ் டெல்லியில்தான், சித்தாந்த் ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.150 கோடியில் பிரம்மாண்டமான பங்களாவை வாங்கியுள்ளது. பொதுவாக, லட்சத்தில் அல்லது ஒரு சில கோடிகளில் விலையுயர்ந்த வீடுகளை வாங்குவது, சாதாரணமாகிவிட்ட நிலையில், ஒரு பங்களாவுக்கு 100 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது, தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எனினும், டெல்லியின் லுட்யன்ஸ் மண்டலத்தில் ரூ.500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பில் பங்களாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் (DLF)-இன் துணை நிறுவனமான சித்தாண்ட் ரியல் எஸ்டேட், ரங்கோலி ரிசார்ட்ஸிடமிருந்து இந்த பங்களாவை வாங்கி இருக்கிறது.

சிஆர்இ மேட்ரிக்ஸ் (CRE Matrix)இன் ஆவணங்களின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் வாங்கப்பட்ட 1,839 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பங்களாவிற்கு, சித்தாந்த் ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.10.5 கோடி மதிப்பில் முத்திரைத் தாளுக்கு வரி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: PPF: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?

யார் இந்த ராஜீவ் சிங்?

இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான டிஎல்எஃப் (DLF) நிறுவனத்தின் தலைவரான ராஜீவ் சிங், 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குரோஃஹே – ஹூரன் (Grohe-Hurun) மதிப்பீட்டின்படி, இந்தியாவின் பணக்கார ரியல் எஸ்டேட் தொழிலதிபராக அறிவிக்கப்பட்டார். 66 வயதான ராஜீவ் சிங், ரியல் எஸ்டேட் மன்னரான குஷால் பால் சிங்கின் ஒரே வழித்தோன்றல் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிஜிட்டல் மோசடிகள்… அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவைதான்…!

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்ற ராஜீவ் சிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பையும் முடித்தார். ராஜீவ் சிங்கின் நிகர மதிப்பு சுமார் ரூ.1.25 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், ராஜீவ் சிங் தலைவராக இருக்கும் டிஎல்எஃப் (DLF) நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சுமார் ரூ.1.86 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மும்பை பங்குச் சந்தை (BSE) அதன் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

டெல்லியில் ரூ.150 கோடியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கிய இந்தியாவின் பணக்கார ரியல் எஸ்டேட் அதிபர்…!



Source link