Last Updated:

பிசிசிஐ உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என பரவலாக தகவல்கள் வெளிவந்த நிலையில், பிசிசிஐயின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு சூழல்கள் கடினமாக மாறின.

அந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இந்த 2 தொடர்களிலுமே ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பேட்டிங்கிலும் அவர் மிகவும் சுமாராக விளையாடியதால் இந்திய அணி தொடரை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக சிட்னியில் நடைபெற்ற 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிசிசிஐ உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது இருவருமே ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் ரோகித் சர்மா இன்னும் சில மாதங்களுக்கு தான் கேப்டனாக தொடர விரும்புவதாக பிசிசிஐ அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க – yuzvendra Chahal : அணியில் இடம்பெறாவிட்டாலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சாஹல்… வருமானம் எங்கிருந்து வருகிறது?

மேலும் கூட்டத்தின் போது ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்கலாம் என்று பேசப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வாரா? அல்லது மாற்றம் இருக்குமா? என்ற இறுதி முடிவை பிசிசிஐ எடுக்கும். அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரவுள்ளதால் அதில் மட்டுமே பிசிசிஐ மற்றும் இந்திய அணி முழு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link