Last Updated:

நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும், தனக்கு ஓய்வு அளிக்குமாறும் ரோகித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரரும் விமர்சகருமான இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்படும் நிலையில் இர்பான் பதான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் பும்ரா தலைமையேற்ற முதல் டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 தோல்விகளையும், ஒரு மேட்சில் டிராவையும் சந்தித்தது.

இதனால் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாகவும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா எடுத்து இருக்கிறார்.

நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும், தனக்கு ஓய்வு அளிக்குமாறும் ரோகித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க – குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா… தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

இதற்கிடையே பார்டர் – கவாஸ்கர் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான், ‘எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும். இந்த சூழலில் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற நான் விரும்பவில்லை.

இந்திய கிரிக்கெட்டிற்காக அவர் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். 5 ஆவது டெஸ்ட் மிக முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றி பெற அனுபவம் அவசியம். முடிவு என்னவாக இருந்தாலும் அதனை இந்த தொடருக்கு பின்னர்தான் வெளிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.





Source link