டெஸ்ட் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் 22 வயதாகும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.

டெஸ்ட் போட்டிகளில் முன்னணி அணியாக இருக்கும் இந்தியாவை, நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் பெட்டிப்பாம்பாக அடக்கியுள்ளனர். இந்த 2 போட்டிகள் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைந்துள்ளன.

விளம்பரம்

இப்படி நெகடிவான விஷயங்கள் பல இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேனாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான பேட்டிங்கால் வரலாறு படைத்துள்ளார்.

92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே காலண்டர் ஆண்டில் 30 சிக்சர்களை கடந்த ஒரே இந்திய வீரர் என்ற ரிக்கார்டை இன்று உருவாக்கியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.  நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விளம்பரம்

இந்த 3 சிக்சருடன் ஒரே காலண்டர் ஆண்டில் அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் மொத்தம் 32 சிக்சர்களை டெஸ்டில் அடித்துள்ளார். இந்த சாதனை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் நிகழ்த்தாதது ஆகும்.

இதையும் படிங்க – சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழப்பு.. கூல் ட்ரிங்ஸ் பெட்டியை பேட்டால் அடித்த விராட் கோலி – வைரல் வீடியோ!

உலக அளவில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 2014 ஆம் ஆண்டில் மட்டும் 33 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்த ஆண்டில், மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஆவது டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை நடைபெறவுள்ளன.

விளம்பரம்

இதனால் மெக்கல்லமின் சாதனையை முறியடித்து மீண்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.



Source link