டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒருநாள் போட்டியைப் போல அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

மழை குறுக்கீடு காரணமாக 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறாத நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் கான்பூரில் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்தது.

விளம்பரம்

அந்த அணியின் மோமினுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 194 பந்துகளை எதிர்கொண்ட அவர் 17 பவுண்டரி 1 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 74.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த இன்னிங்ஸில் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா 9.2 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 300-யை தொட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க – ஒருநாள் போட்டியைப் போல் ரன்கள் குவித்த இந்திய அணி… கடைசி நாள் போட்டியில் வெற்றி பெறுமா?

அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்), அஷ்வின் (524), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் சர்மா (311), ஜாகிர் கான் (311 விக்கெட்டுகள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் ஜடேஜா.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, இன்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

விளம்பரம்

.



Source link