Last Updated:

அரசியல் கட்சிக்காக அதிக நன்கொடை வழங்கியவர்கள் லிஸ்டில் உலகில் முதல் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

News18

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது எலான் மஸ்க் டொனால்டு ட்ரம்புக்காக செலவழித்த தொகை குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் எக்ஸ் தளத்தின் அதிபருமான எலோன் மஸ்க் பரப்புரை மேற்கொண்டார்.

குறிப்பாக எக்ஸ் தளங்களில் அதிக அளவு டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு திரட்டப்பட்டது. ட்ரம்புக்கு ஆதரவாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் எலான் மஸ்க் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் ட்ரம்புக்கு எவ்வளவு தொகை எலான் மஸ்க் செலவு செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2200 கோடி அளவுக்கு எலான் மஸ்க் ட்ரம்புக்கு செலவிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் அரசியல் கட்சிக்காக அதிக நன்கொடை வழங்கியவர்கள் லிஸ்டில் உலகில் முதல் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க – முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா?

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. எலான் மஸ்கை தவிர்த்து இன்னும் சில கோடீஸ்வரர்களும் டொனால்டு டிரம்ப் பரப்பரைக்கு நிதி வழங்கியுள்ளனர்.



Source link