வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகம் ஆன திரைப்படம் விடுதலை. வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையை தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்திற்கு விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். இளையராஜாவின் இசையும் சிறப்பாக அமைந்தது. இந்தநிலையில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

விளம்பரம்

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி அதிக காட்சிகளில இடம்பெறுகிறார். விஜய் சேதுபதிக்கு இணையாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் பாத்திரத்தில் விஜய் சேதுபதி தோன்றியுள்ளார். விடுதலை 2 அடுத்த மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | “ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன்” – விஜயை தொடர்ந்து அரசியல் ஆசையை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்

டிரெய்லர் எப்படி?

“நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் அரசியல் வசனத்துடன் தொடங்கும் டிரெய்லர், பின்னர் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியர் உடனான காதல் காட்சிகளாக விரிகிறது.

விளம்பரம்

இதன்பின், கிஷோரின் கம்யூனிஸ்ட் வேடம், சர்பிரைஸ் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் என சில ஹைலைட்ஸ் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

முதல் பாகத்தில் சொல்லப்பட்டது போலவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், திராவிடம் மற்றும் கம்யூனிச அரசியல் என டிரெய்லரே அழுத்தமான அரசியல் பேசும் படம் இது என்பதை உணர்த்துகிறது. ஆரம்பம் முதல் விஜய் சேதுபதி டிரெய்லரை அலங்கரித்தாலும், இறுதியில் சூரியின் என்ட்ரி இடம்பெறுகிறது.

டிரெய்லரில் இசையின் ராஜாவாக இளையராஜா மிளிர்ந்த அதேநேரம், “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என வசனங்களாலும் டிரெய்லர் கவனம் ஈர்க்கிறது.

விளம்பரம்

.



Source link