Last Updated:
இந்த கிரிக்கெட் வீரரின் வெற்றிக்கு அவரது தந்தை கஞ்சந்த் சிங் முக்கிய பங்காற்றினார். அவர் கேஸ் சிலிண்டரை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து அதன் மூலமாக தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது தந்தைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக அளித்துள்ளார். அந்த பைக்கில் ரிங்கு சிங்கின் தந்தை செல்லும் காட்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற ரிங்கு சிங் தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். மிக எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த இவர் கிரிக்கெட் மூலம் சாதனை படைத்திருப்பது பல இளைஞர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிலும் இடம் பெற்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் நிரந்தரமாக இடம்பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிங்கு சிங்கின் வெற்றிக்கு அவரது தந்தை கஞ்சந்த் சிங் முக்கிய பங்காற்றினார்.
அவர் கேஸ் சிலிண்டரை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து அதன் மூலமாக தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தை கஞ்சந்த் சிங்குக்கு ரிங்கு சிங் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக அளித்துள்ளார்.
இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரிங்கு சிங் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க – Vijay | விஜயை பரந்தூர் களத்துக்கு வரவைத்த சிறுவன்..யார் இந்த ராகுல்?
தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்த பின்னர் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
January 20, 2025 6:40 PM IST