எனினும், இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டமானது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையின் அளவு, பண வீக்கம், ரிப்போ விகிதம் போன்ற பல்வேறு பொருளாதார கருதுகோள்களைப் பொறுத்து அமைகிறது. மேலும், ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கியைப் பொறுத்து மாறுபடும். இந்தப் பதிவில் தனியார், அரசு வங்கி மற்றும் சர்வதேச வங்கிகள் 3 வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

தனியார் வங்கிகளில் 3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு DCB வங்கி மற்றும் RBL வங்கி 7.55% மற்றும் 7.5% வட்டி விகிதத்தை முறையே வழங்கி முன்னிலை வகிக்கிறது. பொதுத்துறை வங்கியான கனரா பேங்க் 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் துறை வங்கிகளோடு ஒப்பிடும்போது, பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை 3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி 7.1% வட்டியையும், பந்தன் பேங்க் 7.25% வட்டியையும், CSB வங்கி 5.75% வட்டி விகிதத்தையும், DCB வங்கி 7.55% வட்டியையும், ஃபெடரல் வங்கி 7.1%, ICICI வங்கி 7% வட்டியையும், Indusind வங்கி 7.25% வட்டியையும், கரூர் வைஸ்யா பேங்க் 7% வட்டியையும், கோடக் மஹிந்திரா பேங்க் 7% வட்டியையும், RBL வங்கி 7.5% வட்டியையும், SBM வங்கி 7.3% வட்டியையும், யெஸ் பேங்க் 7.25% வட்டியையும் வழங்குகின்றன.

இதையும் படிக்க: RBI: ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியலாம்.. இனி வங்கிகள் ‘இந்த’ 2 எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்!

பொதுத்துறை வங்கியில் 3 வருட FD திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா 7.15% வட்டியையும், பேங்க் ஆஃப் இந்தியா 6.5% வட்டியையும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.5% வட்டியையும், கனரா வங்கி 7.4% வட்டியையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6.5% வட்டியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7% வட்டியையும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.75% வட்டியையும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 6.7 சதவீத வட்டியையும் வழங்குகின்றன. சர்வதேச வங்கிகளின் பட்டியலில் Deutsche பேங்க் அதிகபட்சமாக 8% வட்டியையும், HSBC வங்கி 7% வட்டியையும், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பேங்க் 7.1% வட்டியையும் வழங்குகின்றன.

ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்த பணத்தை எடுப்பது சுலபமா?

பிற முதலீட்டு ஆப்ஷன்களைப் போலவே ஃபிக்சட் டெபாசிட்டில் உள்ள பணத்தை வித்டிரா செய்வதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் அல்லது லாக்-இன் பீரியடுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் அவசர கால சூழ்நிலையில் உங்களுடைய பணத்தை எடுப்பதற்கு ஃபிக்சட் டெபாசிட் அனுமதி வழங்குகிறது.

இதையும் படிக்க: அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் 2025: லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்டவற்றிற்கு 80% வரை தள்ளுபடி! 

ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கு TDS பிடித்தம் செய்யப்படுமா?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் பெறும் வட்டி 40,000 ரூபாய்க்கு அதிகமானதாக இருந்தால், அதற்கு TDS பிடித்தம் செய்யப்படும். இதுவே, சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த தொகை 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PAN கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% TDSஆக பிடிக்கப்படும். அதே நேரத்தில் PAN கார்டு இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 20% வருமானத்தில் இருந்து இப்படித்தான் செய்யப்படும்.



Source link