விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு எதிராக தனுஷை குற்றம் சாட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டுள்ள ‘Schadenfreude’ எனும் வார்த்தை கவனம் ஈர்த்து வருகிறது. இதன் அர்த்தம் என்னவென்பதை காணலாம்.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனுஷின் இந்த செயலுக்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘உங்களைப்போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை.

விளம்பரம்

என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக’ பகிரங்க புகார் கூறினார். சமீபத்தில் வெளியான ‘Nayanthara Beyond the fairy Tale’ டிரைலரின் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிபட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விளம்பரம்

மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தின் இறுதி பத்தியில், ‘அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.

விளம்பரம்

Also Read |
உங்கள் மலிவான செயல்களை இனி மாற்றி கொள்ளுங்கள்… தனுஷ் மீது நயன்தாரா அடுக்கடுக்கான புகார்

இந்த நேரத்தில், ஜெர்மனி மொழியின் ‘Schadenfreude’ எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘Schadenfreude’ என்ற வார்த்தையின் அர்த்தம் அடுத்தவர் துயரத்தைக் கண்டு ஒருவர் இன்பம் கொள்வது அல்லது திருப்தி அடைவது. ‘Schadenfreude’ என்பது பிறரின் துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் குணம் என்பதே அந்த வார்த்தையின் பொருள். இதனைத்தான் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

விளம்பரம்

.



Source link