நடிகர் தனுஷ்ஷிற்கு எதிராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தயாரிப்பாளர் தனுஷ் தன்னை ஒரு அரசராக நினைத்துக் கொள்வதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் `நானும் ரவுடி தான்’ திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனுஷின் இந்த செயலுக்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், உங்களைப்போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை.
என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக பகிரங்க புகார் கூறினார். ஒரு மனிதராக நீங்கள்(தனுஷ்) எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று காட்டமாக கூறிய நயன்தாரா, சமீபத்தில் வெளியான Nayanthara Beyond the fairy Tale டிரைலரின் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதாராக நீங்கள் எப்படிபட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர் தனுஷ் – நயன்தாரா இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் தொடர்பாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த செல்வமணி, “இரண்டு பேருக்கும் என்ன கான்ப்பிளிக்ட் என்பது தெரியவில்லை. நடிகைகள் உணர்வு பூர்வமாக ஒரு குழந்தைகளே.. தனுஷ் நட்பாக பழகக் கூடியவர். எதனால் முரண்பாடு என்பது தெரியவில்லை.
நடிகர் தனுஷ் – நயன்தாரா உணர்வு பூர்வமாணவர்கள். நயன்தாரா வலி ரொம்ப அதிகமாக தெரிகிறது. இதை பெரிய விஷயமாக்காமல் கடந்து போய் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே விருப்பம். இத தயவு செய்து பெருசா பன்னாதீங்க… தனுஷ் நிலைமைக்கு 10 கோடியோ, 100 கோடியோ பெரிய விஷயமல்ல.. தனுஷ் கோவத்தின் உச்சத்தில் உள்ளார். தனுஷ் மனவலியில் உள்ளார். கோபத்தை விட பெண்ணின் வலி ரொம்ப பெரியது.
இதையும் படிங்க: திரைப்பட தயாரிப்பாளர் ஆதரவில் நடிகை கஸ்தூரி பதுங்கலா? போலீஸ் விசாரணை!
நயன்தாராவின் உழைப்பு அசாதாரன உழைப்பு… எனக்கே நிறைய நடிகைகளுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை 10 வருடங்கள் கழித்து சிரித்து காமெடியாக நினைத்துக் கொள்வார்கள்… பத்திரிகையாளர்கள் இருவருக்கும் உள்ளே நுழைந்து பெரிது படுத்த வேண்டாம். நடிகர் தனுஷ் – நயன்தாரா ஒன்று சேர வேண்டும்
இப்போதைக்கு நாங்கள் சமரசம் செய்துவைக்க முடியாது. இத கடந்து போயிடுங்கன்னு மட்டும் வேண்டுகோள் தான் வைக்க முடியும் என்றார்.
.