இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதேபோல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் செயலாளர், தலைமைப் பொருளாதார ஆலோசகர் மற்றும் பிற துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன், பணவீக்கம் மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் போது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் விரிவான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.

தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைப்பது:

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தலைவர் சஞ்சீவ் பூரி உட்பட தொழில் பிரதிநிதிகள் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் வரை வருமானம் பெறும் தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைக்க பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம், செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கவும், நுகர்வு உந்துதல் மற்றும் வருவாய் ஈட்டுவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) துணைத் தலைவர் விஜய் சங்கர், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் தேவை என்று வலியுறுத்தினார்.

வர்த்தகம் மற்றும் தொழில் சபை (PHDCCI) தலைவர் ஹேமந்த் ஜெயின், தேவையைத் தூண்டுவதற்கும் பணவீக்க அழுத்தங்களைக் குறைப்பதற்கும் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்துள்ளார்.

எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்தல்:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று சிஐஐ தெரிவித்துள்ளது. மே 2022 முதல் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 40% குறைந்துள்ள நிலையில், உற்பத்தி வரியைக் குறைப்பது பணவீக்கத்தைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில், செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் நுகர்வைத் தூண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு-தீவிரமான துறைகளுக்கான ஆதரவு:

ஜவுளி, காலணி, சுற்றுலா மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய துறைகளில் அதிக கவனம் கொடுத்து, உலக மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இந்தத் துறைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற நுகர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு:

சிஐஐ பொது இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி, சமீபத்திய காலாண்டுகளில் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ள கிராமப்புற நுகர்வு போக்கின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

குறிப்பாக மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தின் (MGNREGS) தினக் கூலியை ரூ. 267ல் இருந்து ரூ. 375 ஆக உயர்த்துவது, விவசாயிகளுக்கான ஆண்டு உதவித் தொகையாக வழங்கப்படும், PM-KISAN நிதியை ரூ. 6,000ல் இருந்து ரூ. 8,000 ஆக உயர்த்துவது, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு நுகர்வு வவுச்சர்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவை கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிப்பதையும், தேவையைத் தூண்டுவதையும் அதிகரிக்கும்.

பரந்த பொருளாதார மற்றும் கட்டமைப்பு சவால்கள்:

சிஐஐ மற்றும் பிற அமைப்புகள் பணவீக்கத்தைச் சமாளிப்பது குறித்து வலியுறுத்தியுள்ளன. அதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குதல், ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் உள்ளிட்ட வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுள்ளன. உணவுப் பாதுகாப்பிலும் பணவீக்கத்திலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கவனிக்க வேண்டும்.

மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மற்றும் நிலையான நடைமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் எதிர்பார்ப்புகள்:

மத்திய பட்ஜெட்டில், 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட ரியல் எஸ்டேட் துறையில் என்ன விஷயங்கள் புதிதாக வரப்போகிறது என்பது மீதான் ஆவல் அதிகரித்து உள்ளது. 2024ம் ஆண்டில் உயரும் விலைகள், உயர்ந்த கடன் செலவுகள் மற்றும் விநியோகத் தடைகள் ஆகியவை காரணமாக வீடு விற்பனை 4 சதவீதம் குறைந்துள்ளது.

மலிவு விலை வீடு:

கட்டுமான நிறுவனங்கள் வீட்டுக் கடனின் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றனர். இதன் மூலம், மத்திய வருமானக் குடும்பங்கள் வீடு வாங்குவதை ஊக்குவிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.



Source link