Last Updated:

Shiva Rajkumar | கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்துள்ளார். இவருக்குப் புற்றுநோய் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

News18

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் பூரண நலம் பெற்று குணமடைந்துள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்துள்ளார். இவருக்குப் புற்றுநோய் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார், தனக்கு டிச.24-ம் தேதி பிரபலமான புற்றுநோயியல் நிபுணர், மருத்துவர் முருகேஷ் மனோகர் சிகிச்சை அளிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி அவருக்கு சிறுநீரக புற்றுநோய் அறுவைச் சிகிச்சை அமெரிக்காவில் நடந்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சை முடிந்த நிலையில் சிவராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலில் புற்றுநோய்க்கு பயந்ததாகவும், தனக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து இரட்டிப்பு ஆற்றலுடன் நாடு திரும்புவேன் என்றும் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.





Source link