Last Updated:

சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக், பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

News18

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் “சிக்கந்தர்” என்ற படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசரில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது குழுவினரை சல்மான்கான் சீண்டியுள்ளதாக இணையத்தில் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் 1998 ஆம் ஆண்டு ஜோத்பூர் காட்டில் மான் வேட்டையாடப்பட்ட வழக்கில் சல்மான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சல்மான்கான் அரியவகை மான்களை வேட்டையாடியதாக புகாரில் சிக்கினார். இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரை கொலை செய்யப் போவதாக லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதலில் இதனை பலரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக், பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சிக்கந்தர்” படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தலையில் மான் கொம்பை போன்ற கிரீடத்தை அணிந்த நபர் சல்மான் கானை தாக்க முற்படுகிறார். அப்போது சல்மான் கான் அவரை சுட்டு தள்ளுகிறார். இந்த காட்சி டீசரில் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க – ‘செல்பி எடுத்துக் கொள்ள விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்’ – இயக்குனர் பாலா பகிர்ந்த தகவல்…

இதேபோன்று சூரியனை பார்த்து எத்தனை பேர் கத்தினாலும் சூரியன் எப்போதும் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற பொருளைக் குறிக்கும் இந்தி டயலாக்கை சல்மான் கான் பேசுகிறார். இவை அனைத்தும் சல்மான் கான் எதிர்பார்ப்பாளர்களை குறி வைத்து டீசரில் காட்சி மற்றும் வசனம் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

“சிக்கந்தர்” படத்தின் டீசருக்கு யூடியூப்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வெளியான டீசர் தற்போது வரை நான்கு கோடிக்கும் அதிகமான பார்வையை குவித்துள்ளது.



Source link