Last Updated:

Route என்ற நிறுவனத்தின் சார்பாக பொங்கல் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆன்டனியுடன் கலந்து கொண்டார். அப்போது விளையாட்டு போட்டிகளும் உற்சாகமாக நடத்தப்பட்டன

News18

திருமணமான பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது முதல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில், அதில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டும் தமிழர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமிழ் சினிமா துறையிலும் ஏராளமான நடிகர் நடிகைகள் இன்று பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் Route என்ற நிறுவனத்தின் சார்பாக பொங்கல் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆன்டனியுடன் கலந்து கொண்டார். அப்போது விளையாட்டு போட்டிகளும் உற்சாகமாக நடத்தப்பட்டன.

இதையும் படிங்க – சூர்யாவின் ரெட்ரோ படத்தில் இடம்பெறும் நடிகர்கள்… கவனம் பெறும் பொங்கல் வாழ்த்து போஸ்டர்

இந்நிலையில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் விழாவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். அவரும் பொங்கல் வாழ்த்தை பரிமாறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தற்போது இதுகுறித்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில் அவர் தற்போது தனது கடைசி படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஓரிரு மாதங்களில் இந்த படத்துடைய ஷூட்டிங் முழுவதுமாக நிறைவு பெற்றவுடன் அரசியலில் முழுமையாக விஜய் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





Source link