Last Updated:

கர்நாடகாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் தளபதி 69 படத்தை தயாரித்து வருகிறது

News18

விஜய் நடித்துவரும் அவரது 69 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

கர்நாடகாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் தளபதி 69 படத்தை தயாரித்து வருகிறது. கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, மமிதா பைஜூ, நரேன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் அரசியலில் அவர் முழு கவனம் செலுத்த உள்ளதால் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பகவந்த் கேசரி படத்தை தழுவி தளபதி 69 உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க – Ajithkumar | எனக்கு எது வேணும்னாலும் நடக்கலாம் என அஜித் சொன்னார் – மகிழ் திருமேனி ஷேரிங்ஸ்

இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் உடன் டைட்டில் வெளியிடப்படுமா என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. தளபதி 69 படத்தின் தலைப்பு நாளைய தீர்ப்பு என இருக்கலாம் என்று கூறப்படுகிறது.





Source link