Last Updated:
இதற்கிடையே தமிழக பிரச்சனைகள் குறித்து விஜய் குரல் கொடுத்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிப்புக்குண்டான விவகாரத்தில் விஜய் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்.
விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு என்றைக்கும் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், டைட்டில் குறித்த புதிய தகவல் இணையத்தில் பலம் வருகிறது.
தி கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பதால் தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
தற்போது இந்த படத்துடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தமிழக பிரச்சனைகள் குறித்து விஜய் குரல் கொடுத்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிப்புக்குண்டான விவகாரத்தில் விஜய் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்.
தளபதி 69 படத்தை முடித்துக் கொண்டு விஜய் முழுவதுமாக அரசியல் ஈடுபட உள்ளார். ஏற்கனவே தளபதி 69 படத்தின் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் பரவி இருந்தது. ஆனால் தற்போது பொங்கலையொட்டி டைட்டில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
December 31, 2024 9:04 PM IST