Last Updated:

படத்தை இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை டார்கெட் செய்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News18

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என இணையத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த தி கோட் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த திரைப்படம் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் எச். வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபல நடிகர் பாபி தியோல் வில்லன் கேரக்டரில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர்த்து பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜூ, நரேன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தளபதி 69 பூஜைக்கு பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் அவரது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. படத்தை இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை டார்கெட் செய்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில காரணங்களால் வெளியீடு 2026 பொங்கலுக்கு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது. படம் வெளியாக இன்னும் 9 மாதங்களுக்கும் அதிகமான காலம் உள்ள சூழலில் அது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் இப்போதே எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க – பிறந்த நாளில் இசையமைப்பாளர் இமான் வெளியிட்ட அறிவிப்பு.. பாராட்டும் திரையுலகம்..

அதேநேரம் 2025 தீபாவளியை விடவும் பொங்கலுக்கு அதிக விடுமுறை நாட்கள் இருப்பதால் அதனை முன்னிட்டு படத்தை வெளியிடலாம் என்ற திட்டத்தில் படக்குழு இருப்பதாகவும் தகவல்கள் பரவியுள்ளன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பொங்கலையொட்டி படம் வெளியானால் அது விஜய்க்கு இன்னும் பலமாக அமையும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.



Source link