Last Updated:

இந்த பண்டிகை காலக்கட்டத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் AIoT தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

News18

ரியல்மி தனது குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது. இதன் விற்பனை ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி முடிவடையும். இந்த காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் AIoT தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில், ரியல்மியின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களில் ரூ.10,000 வரை தள்ளுபடியும், AIoT தயாரிப்புகளில் ரூ.500 வரை தள்ளுபடியும் இருக்கும்.

இந்த டீல்கள் நிறுவனத்தின் இந்திய இணையதளமான அமேசான், பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும். ரியல்மி P2 ப்ரோ 5G போனுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி கிடைக்கும். ரியல்மி Narzo 70 டர்போ 5G, ரியல்மி GT 7 ப்ரோ ஆகியவை விற்பனையின்போது பெரும் தள்ளுபடியில் கிடைக்கும். ரியல்மி குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரியல்மி பட்ஸ் T310, ரியல்மி பட்ஸ் T110 ஆகியவற்றிலும் ரூ.500 வரை தள்ளுபடி பெறலாம்.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் AIoT தயாரிப்புகளுக்கான சலுகைகள்:

வரவிருக்கும் ரியல்மி குடியரசு தின விற்பனையின்போது, ​​ரியல்மி P2 ப்ரோ 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சாதாரண ஆரம்ப விலை ரூ. 4 ஆயிரம் குறைந்துள்ளது. இதேபோல், ரியல்மி GT 7 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ. 59,999இல் இருந்து ரூ.54,999ஆக குறைக்கப்பட்டது. 16ஜிபி ரேம் + 512ஜிபி சேமிப்பு கொண்ட போனின் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.65,999இல் இருந்து ரூ.59,999ஆக குறைக்கப்பட்டது. ரியல்மி 14X போனை ரூ.13,999 தொடக்க விலையில் ரூ.1000 தள்ளுபடியுடன் வாங்கலாம். வரவிருக்கும் விற்பனையில் ரியல்மி 13 ப்ரோ ஆனது ரூ.26,999 விலையில் இருந்து ரூ.23,999ஆக குறைக்கப்பட்டது.

ரியல்மி Narzo 70 டர்போ 5G அடிப்படையிலான 6GB+128GB வேரியண்ட்டின் விலை ரூ.16,999இல் இருந்து ரூ.14,499ஆக குறைக்கப்பட்டது. ரியல்மி GT 6T போனின் விலை ஆனது ரூ.30,999இல் இருந்து ரூ.23,999ஆக குறைக்கப்பட்டது. இந்த போனின் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.39,999இல் இருந்து ரூ.29,999ஆக குறைக்கப்பட்டது. ரியல்மி 13 பிளஸ் 5G போனின் விலை ஆனது ரூ. 20,999இல் இருந்து ரூ.16,999ஆக குறைக்கப்பட்டது. ரியல்மி பட்ஸ் ஏர் 6 போன் ஆனது ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.3,299இல் இருந்து ரூ.2,799ஆக குறைக்கப்பட்டது.

இதையும் படிக்க: இந்தியாவில் OnePlus 13 சீரிஸ் அறிமுகம்… விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளே…! 

இதேபோல், ரியல்மி பட்ஸ் T310 விலை ஆனது ரூ.200 தள்ளுபடியுடன் ரூ.2,199க்கு பதிலாக ரூ.1,999க்கு வாங்கலாம். அதேபோல் ரியல்மி பட்ஸ் T110 விலை ஆனது ரூ.300 தள்ளுபடியுடன் ரூ.1,499இல் இருந்து ரூ.1,099ஆக குறைந்துள்ளது.



Source link