Last Updated:

ஜிஎஸ்டி வரம்பை 5 சதவீதம் மற்றும் 12 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்

News18

மத்திய அரசின் பட்ஜெட், வரும் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், ஜிஎஸ்டியை 5 சதவீதம் மற்றும் 12 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே இருக்குமாறு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ள தொழில்துறையினர், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரியை 20 சதவீதமாக குறைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பம்ப் செட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இந்த பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு கட்டடத்தை கட்டும்போது, 18 சதவீதம் வரி செலுத்த வேண்டி உள்ள நிலையில், அதனை உள்ளீட்டு வரியாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களைப் போன்று, சிறு, குறு நிறுவனங்களுக்கும் வருமான வரியை 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வலியுறுத்தினார்.

அதேபோல், ஜிஎஸ்டி வரம்பை 5 சதவீதம் மற்றும் 12 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க துணைத் தலைவர் சுருளிவேல் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பட்ஜெட்டில் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுருளிவேல் கேட்டுக் கொண்டார். GST, TDS பதிவுமுறையை எளிமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.



Source link