Last Updated:

அடர்ந்த வனப் பகுதியில் அமைந்த பாழடைந்த பங்களாவில் மம்மூட்டி மந்திரவாதியாகவும், சாத்தானாகவும் வசித்து வருகிறார். அவரிடம் சிக்கிய கதாநாயகன் எப்படி அவரிடமிருந்து தப்பிக்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாக திகிலூட்டும் வகையில் இயக்குனர் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

News18

திகில் படங்களை விரும்பி பார்க்கக் கூடியவர்கள் தவறவிட கூடாத படம் என ஒரு திரைப்படம் சமீப நாட்களாக கொண்டாடப்படுகிறது.

இந்த திரைப்படம் ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. திகில் படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் இந்த படத்தை நீங்கள் மிஸ் பண்ணி விடக்கூடாது என பலரும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

காதல், ஆக்சன், திரில்லர், திகில் என பலவிதமான ஜேனர்களில் சினிமாக்கள் வெளியாகி வருகின்றன. இவைகளில் திகில் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம் இருக்கும். இந்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது.

முற்றிலும் கற்பனை கலந்து இந்த திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தி சினிமாவில் வெளிவந்த ஸ்ட்ரீ 2 என்ற திரைப்படம் அதிகம் கொண்டாடப்பட்டது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 900 கோடி அளவுக்கு வசூல் செய்தது. இப்படி வசூல் அமையும் என படக்குழுவினரே எதிர்பார்க்கவில்லை.

இந்த படத்தை விடவும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பிரம்மயுகம் என்ற திரைப்படம் ரசிகர்களுக்கு சூப்பரான திகில் அனுபவத்தை கொடுப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவியுள்ளன. 18 வது நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும் கதையாக இந்த பிரம்மயுகம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – Rashmika mandanna | வீல் சேரில் ராஷ்மிகா மந்தனா..என்ன ஆச்சு.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி..காரணம் என்ன?

அடர்ந்த வனப் பகுதியில் அமைந்த பாழடைந்த பங்களாவில் மம்மூட்டி மந்திரவாதியாகவும், சாத்தானாகவும் வசித்து வருகிறார். அவரிடம் சிக்கிய கதாநாயகன் எப்படி அவரிடமிருந்து தப்பிக்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாக திகிலூட்டும் வகையில் இயக்குனர் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

மம்மூட்டி இதில் வில்லனாக நடித்திருக்கிறார். அர்ஜுன் அசோகன் மற்றும் சித்தார்த் பரதன் ஆகியோர் அற்புதமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தினர். சுமார் 28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தை சோனி லைவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.



Source link