News18

பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், 2000ம் ஆண்டில் சிறிய கார் பார்க்கிங்கிலிருந்து ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்குகிறார். தற்போது, ​​அவரது நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து, நிறைய வருவாயை ஈட்டி வருவதோடு, இதுவரை 8,500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தை தொடங்கிய பெண்ணும் நிறைய சொத்துகளை சேர்த்துள்ளார். இதைக் கேட்டு மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இருப்பினும், சிலர் அவரை கண்டித்தும் வருகிறார்கள். ஏனென்றால், அவர் தொடங்கிய நிறுவனம் ஒரு சூதாட்ட தளம் ஆகும். இதில் குறைவான வருமானம் ஈட்டும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்து கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்கிறார்கள்.

அந்தப் பெண்ணின் பெயர் டெனிஸ் கோட்ஸ். அவர் தொடங்கிய நிறுவனம் Bet365. டெனிஸ் கோட்ஸ் தற்போது பிரிட்டனின் பணக்கார பெண்களில் ஒருவராகவும், இவர் தொடங்கிய நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சூதாட்ட தளமாகவும் உள்ளது.

2024ம் ஆண்டில் மட்டும், தனது Bet365 நிறுவனத்திலிருந்து ரூ.1,500 கோடி (சுமார் 150 மில்லியன் பவுண்டுகள்) சம்பாதித்துள்ளார் டெனிஸ். இந்த வருமானம் அவருடைய தனிப்பட்ட வருமானம் மட்டுமே; இது நிறுவனத்தின் வருமானம் அல்ல. ஆனால், கடந்த ஆண்டை விட இவரது சம்பளம் குறைவுதான். கடந்த ஏழு ஆண்டுகளில் டெனிஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20,000 கோடியை ($2 பில்லியன்) தாண்டியுள்ளது.

மார்ச் 2024-ல் முடிவடைந்த நிதியாண்டில் Bet365 சமர்ப்பித்த பதிவுகளின்படி, நிறுவனத்திடமிருந்து ரூ.950 கோடி சம்பளமாக டெனிஸ் கோட்ஸ் பெற்றுள்ளார். இது தவிர, நிறுவனத்தின் மொத்த டிவிடெண்ட் தொகையான ரூ.1,100 கோடியில் பாதியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது மொத்த ஆண்டு வருமானம் ரூ.1,500 கோடியாக உயர்ந்தது. இதை தினசரி வருமானமாக கணக்கிட்டால், நாளொன்றுக்கு அவர் ரூ.4 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கு UPI யூஸ் பண்றது எப்படி….? தெரிஞ்சுக்கலாம் வாங்க…!

கடந்த பத்தாண்டுகளில், டெனிஸ் கோட்ஸ் சுமார் ரூ.24,000 கோடி (£2.4 பில்லியன்) வருமானம் ஈட்டியுள்ளார். 2020-ல் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ​​ஆன்லைன் சூதாட்டம் கணிசமாக அதிகரித்தது. அதே ஆண்டில், அவர் ரூ.4,690 கோடி சம்பாதித்து சாதனை படைத்தார். இதற்கிடையில் டெனிஸ் கோட்ஸின் அபரிதமான வருவாய் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

Bet365 நிறுவனத்தில் டெனிஸின் குடும்பமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவரது சகோதரர் ஜான் கோட்ஸ், துணை தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ளார். இது தவிர, கோட்ஸ் குடும்பம் ஸ்டோக் சிட்டி கால்பந்து கிளப்பையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் மைதானத்திற்கு Bet365 என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நவம்பர் 2024ல் மேலும் 8 டன் தங்கத்தை வாங்கிய இந்திய ரிசர்வ் வங்கி…!

ஒருபக்கம் Bet365 நிறுவனம் கோடி கோடியாக வருவாய் ஈட்டினாலும், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தது. 2020-ம் ஆண்டில், டெனிஸின் தந்தை பீட்டர் கோட்ஸ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மருக்கு (தொழிலாளர் கட்சி) ரூ.25 லட்சம் (£25,000) நன்கொடையாக வழங்கினார். இதற்குப் பிறகு, ஸ்டார்மரின் கட்சி மற்றும் சூதாட்ட தளம் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டன. 2023ம் ஆண்டில், வாடிக்கையாளர் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், பண மோசடியை தடுக்கத் தவறியதற்காகவும் Bet365 நிறுவனத்திற்கு ரூ.5.82 கோடி (£582,000) அபராதம் விதிக்கப்பட்டது.



Source link