பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு, காமெடி ராஷ்மிகா மந்தனாவின் காதல் காட்சிகள், பஹத் பாசிலின் வில்லத்தனமான நடிப்பு, படத்தின் பாடல்கள், திரைக்கதை, பிண்ணணி இசை என ஒரு கமெர்சியல் படத்திற்கு தேனையான அனைத்தையும் வேற லெவலாக கொடுத்து இருப்பார் இயக்குநர் சுகுமார்.
முதல் பாகத்தின் வெற்றியாலே இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இரண்டாம் பாகத்தின் முதலில் வெளியான பாடல் புஷ்ப ராஜ் பாடலும், இரண்டாம் பாடலான சாமி பாடலும், தற்போது வெளியாகி இருக்கும் கிஸ்கா பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக உள்ளது. இந்த பாடல்களில் வீடியோவை திரையில் பார்க்க பல ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லரை பார்த்த உடன் முதல் பாகத்தை விட பல மடங்கு பிரமாண்டமாக இருப்பதாக தெரிகிறது. படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி நல்ல படத்தை பார்க்க போகிறோம் என சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்க : Free Driving Class: 8 ம் வகுப்பு தகுதி போதும்…இலவசமாக டிரைவிங் கத்துக்கலாம்..!!
புஷ்பா பாகம் ஒன்றிற்கு தேவிஸ்ரீபிரசாத் மட்டுமே இசையமைத்து இருப்பார். ஆனால் இதன் இரண்டாம் பாகத்தை தேவி ஸ்ரீ பிரசாத் தவிர இதன் பின்னணி இசையை தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்து இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக பஹத் பாசிலின் வில்லத்தனத்தையும், சுகுமார் ஸ்கீரின் பிளைவையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். என்னதான் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தாலும் படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடம் இருப்பது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.