தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இருப்பினும் இதனை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.
2000 ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படம் நடிகையாக அறிமுகத்தை கொடுத்தது.
இதன் பின்னர் பைரவா, ரஜினி முருகன், மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார். இவருக்கு திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க – Nayanthara : எப்படி இருக்கு நயன்தாரா கல்யாண வீடியோ? நெட்டிசன்கள் ரிவ்யூ…
இந்த நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளது. அவரது நீண்ட நாள் நண்பரை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
.