பிரபல கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (30) தனது அபார்ட்மென்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷோபிதா சிவன்னா, “Eradondla Mooru”, “Attempt to Murder”, “Vandana” போன்ற கன்னட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். திரைப்படங்கள், தவிர காலிபட்டா, மங்கள கௌரி உட்பட 12 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையே, நேற்று ஹைதராபாத் கோண்டாபூரில் உள்ள தனது அபார்ட்மென்டில் இருந்து ஷோபிதா சிவன்னா சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

காவல்துறைக்கு கிடைத்த தகவலில் நடிகை ஷோபிதா சிவன்னா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடிகை ஷோபிதா சிவன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

ஷோபிதா சிவன்னாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் அதன் விவரம் தெரியவரும்.

இதற்கிடையே, ஷோபிதா சிவன்னாவின் மரணம் கன்னட திரையுலகில் சோகத்தை தாண்டி பேசுபொருளாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் அவரின் திருமணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷோபிதா சிவன்னா ஹைதராபாத்தை சேர்ந்த சுதீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர், சீரியல்களில் மட்டும் நடித்து வந்துள்ளார். சீரியல்களிலும் சமீப காலமாகவே நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

விளம்பரம்

Also Read | Gold Rate | மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இதற்கிடையே, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து திருமண புகைப்படத்தையும், கணவரின் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார். இதோடு, படப்பிடிப்பு தளங்களிலும் சமீப காலமாகவே தனிமையை நாடிவந்ததாக சக நடிகர்கள் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஷோபிதா சிவன்னா, திடீரென சைலண்ட்டானது அவரின் திருமணத்தில் சிக்கல் இருப்பதை உறுதிப்படுத்தியதாக கன்னட ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விரக்தியில் ஷோபிதா சிவன்னா தற்கொலை முடிவை எடுத்தாரா என்று கன்னட திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

விளம்பரம்

.



Source link