தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான ஃபிளிப்கார்ட்டில் Big Diwali sale ஸ்பெஷல் விற்பனை துவங்கி இருக்கிறது. வரும் அக்டோபர் 31 வரை இந்த சிறப்பு விற்பனை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் பல ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவிர ஐபோன் 16 சீரிஸிலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட பேங்க் கார்ட் சலுகைகளின் அடிப்படையில் ஸ்பெஷல் டீல்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
பேங்க் டிஸ்கவுன்ட் ஆஃபர்ஸ் :
ஃப்ளிப்கார்ட்டானது ஐபோன் 16 சீரிஸின் அனைத்து மாடல்களையும் அவற்றின் ஒரிஜினல் விலையில் விற்பனை செய்கிறது. ஆனால் தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஃபோனை குறைந்த விலையில் வாங்கலாம். எஸ்பிஐ பேங்க் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ரூ.1,500 வரை தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கிறது.
ஆனால், நீங்கள் இன்னும் அதிக தள்ளுபடி சலுகைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், லேட்டஸ்ட் ஐபோன் 16 சீரிஸை விஜய் சேல்ஸ் மூலம் வாங்குவதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். Vijay Sales-ல் பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் வெர்ஷன்களுக்கு பொருந்தும் மற்றும் ப்ரோ மாடல்கள் ரூ.4,000 தள்ளுபடி வங்கி சலுகையுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த சலுகைகள் எப்போது வரை இருக்கும் என்ற தகவல் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. iPhone 16 மொபைலின் 128GB மாடலின் விலை ரூ.79,900-ல் தொடங்குகிறது. உங்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், ஆப்பிள் நிறுவனம் 256GB வெர்ஷனின் ரூ.89,900 விலையில் வழங்குகிறது, அதே சமயம் டாப்-எண்ட் 512GB வேரியன்ட்டின் விலை ரூ.1,09,900 ஆகும்.
பெரிய டிஸ்ப்ளேவை விரும்புவோருக்கு iPhone 16 Plus-ன் 128GB வேரியன்ட் ரூ.89,900 முதல் கிடைக்கிறது. 256GB வேரியன்ட்டின் விலை ரூ.99,900, மற்றும் 512GB வேரியன்ட் ரூ.1,19,900-க்கு கிடைக்கும். இதனிடையே iPhone 16 Pro 128GB வேரியன்ட்டிற்கான ஆரம்ப விலை ரூ.1,19,900 ஆகும். ஆப்பிள் 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது,இவற்றின் விலைகள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 ஆகும். iPhone 16 Pro Max 256GB வேரியன்ட்டின் விலை ரூ.1,44,900-ல் தொடங்குகிறது. 512GB மாடலின் விலை ரூ.1,64,900, அதே சமயம் 1TB வெர்ஷனின் விலை ரூ.1,84,900 ஆகும்.
.