Last Updated:

Ajith | நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் ‘24H Dubai 2025’ கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சி இன்று (ஜன.7) துபாயில் நடைபெற்றது. அப்போது அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது.

News18

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நல்வாய்ப்பாக நடிகர் அஜித்துக்கு எந்த காயமும் இல்லை என கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் ‘24H Dubai 2025’ கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சி இன்று (ஜன.7) துபாயில் நடைபெற்றது. அப்போது அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





Source link