நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால், வரவிருக்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்தியா வெல்லும் வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய மண்ணில் முதல் முறையாக 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 18 ஆண்டு டெஸ்ட் சாதனையை முறியடித்தது. கடந்த சில வாரங்களில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியாவுடனான தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணியினர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டின் கருத்து வேறு விதமாக உள்ளது.

விளம்பரம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ உடன் பேசிய ஹேசில்வுட், நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர் இந்தியா நிச்சயம் காயமடைந்துள்ளது, எனவே அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்தார். மேலும் “இது ஒருவிதத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சிங்கத்தை எழுப்பியுள்ளனர். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்” என்று ஹேசில்வுட் கூறினார்.

இதையும் படிக்க:
ஆஸ்திரேலியாவை வீழ்த்த கம்பீர், ரோஹித் வியூகம்… இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

தொடர்ந்து பேசிய அவர், “3-0 என்ற கணக்கில் தோல்வி அடைவது, 3-0 என்ற கணக்கில் எளிதாக வெல்வதை விட சிறந்தது. அவர்களுடைய நம்பிக்கை குறித்து அவர்களுக்குள்ளே கேள்வி எழுந்திருக்கலாம். பல இந்திய வீரர்கள் இங்கு (ஆஸ்திரேலியாவில்) விளையாடியிருக்கிறார்கள். சில பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் புதிதாக வரவுள்ளனர். எனவே அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து சிறிது குழப்பம் இருக்கும். அதைப் பற்றி அதிகம் யோசிக்க முடியாது என்று நினைக்கிறேன். முடிவுகள் நிச்சயமாக நமக்கு நல்லதாக இருக்கும்” என்று கூறினார்.

விளம்பரம்

மேலும் நியூசிலாந்தின் திறமையான விளையாட்டுக்கு ஹேசில்வுட் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நியூசிலாந்து அணியினருக்கு பாராட்டு. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெல்வது நம்பமுடியாதது. ஒரு போட்டியை வெல்வது மிகவும் கடினம், தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வெல்வது என்பது இன்னும் கடினம்,” எனத் தெரிவித்தார்.

பஞ்சுமிட்டாய் பேரழகி.. நடிகை தமன்னாவின் ஹாட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்


பஞ்சுமிட்டாய் பேரழகி.. நடிகை தமன்னாவின் ஹாட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

நியூசிலாந்து உடனான தோல்விக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போது, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் மற்ற அணி போட்டிகளின் முடிவை நம்பியே இது இருக்க முடியும்.

விளம்பரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்திய மண்ணில் முதல் முறையாக 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 18 ஆண்டு டெஸ்ட் சாதனையை முறியடித்தது. கடந்த சில வாரங்களில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியாவுடனான தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணியினர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸில்வுட்டின் கருத்து வேறு விதமாக உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் விரிதிமான் சாஹா.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

மிகவும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ உடன் பேசிய ஹேஸில்வுட், நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர் இந்தியா நிச்சயம் காயமடைந்துள்ளது, எனவே அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்தார். மேலும் “இது ஒருவிதத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் மிருகத்தை எழுப்பியுள்ளனர். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்” என்று ஹேஸில்வுட் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “3-0 என்ற கணக்கில் தோல்வி அடைப்பது, 3-0 என்ற கணக்கில் எளிதாக வெல்வதை விட சிறந்தது. அவர்களுடைய நம்பிக்கை குறித்து அவர்களுக்குளே கேள்வி எழுந்திருக்கலாம். பல இந்திய வீரர்கள் இங்கு (ஆஸ்திரேலியாவில்) விளையாடியிருக்கிறார்கள். சில பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் புதிதாக வரவுள்ளனர். எனவே அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து சிறிது குழப்பம் இருக்கும். அதைப் பற்றி அதிகம் யோசிக்க முடியாது என்று நினைக்கிறேன். முடிவுகள் நிச்சயமாக நமக்கு நல்லதாக இருக்கும்” என்று கூறினார்.

விளம்பரம்
நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்.!


நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்.!

மேலும் நியூசிலாந்தின் திறமையான விளையாட்டுக்கு ஹேஸில்வுட் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நியூசிலாந்து அணியினருக்கு பாராட்டு. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெல்வது நம்பமுடியாதது. ஒரு போட்டியை வெல்வது மிகவும் கடினம், தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வெல்வது என்பது இன்னும் கடினம்,” என தெரிவித்தார்.

நியூசிலாந்து உடனான தோல்விக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போது, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் மற்ற அணி போட்டிகளின் முடிவை நம்பியே இது இருக்க முடியும்.

விளம்பரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

.



Source link