தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு appeared first on Daily Ceylon.