தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு, முன்னாள் நட்சத்திர வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் பயிற்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது.  இதற்காக இந்திய அணியும் தலைமை பயிற்சியாளர் கம்பீரும் வரும் 10- ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

இதனிடையே தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆம் தேதிகளில்  4 டி20 போட்டிகளில் இந்திய அணி  விளையாட உள்ளது.

விளம்பரம்

போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி வரும் 4 ஆம் தேதி தென்னாப்ரிக்கா புறப்படுகிறது. இதனால் டி20 அணிக்கு கம்பீர் பயிற்சி அளிப்பதில் சிக்கல் எழுந்தது.

இதையும் படிங்க – புனே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? காரணங்களை அடுக்கிய ரோஹித் சர்மா

இந்நிலையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி- 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சகரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார், வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்

.



Source link