குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரிய ஜனாதிபதி, நாட்டில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானத்திற்காக அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனவரி 6 ஆம் திகதிக்கு முன்னர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Source link