இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஈரானின் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவிட வேண்டும் என அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். மேலும் இஸ்ரேல் நோக்கி வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இஸ்ரேல் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்களில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்..
இதனால், ஈரான் ஏவிய பல ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லையை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஈரான் தாக்குதல் முடிவுக்கு வரும் வரை வெள்ளை மாளிகையில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்ததால் மூன்றாம் உலகப் போர் அபாயம் எழுந்துள்ளது.
.