ஆனால், தற்போதைய தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், ஏஐ மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் விரைவான ஒப்புதல்களை அனுமதிக்கும் வகையில் முன்னேறியுள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது, ஆனால் இந்த வசதிகளை அனுபவிக்கும் போது மோசடிகளைத் தவிர்க்கவும், முக்கியமான தரவைப் பாதுகாக்கவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான விரைவான மற்றும் திறமையான செயல்முறையிலிருந்து, தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள் வரை, தொழில்நுட்பம் முழு தனிநபர் கடன் விண்ணப்பப் பயண நடவடிக்கைகளையும் எளிதாக்கியுள்ளது.
ஆன்லைன் கடன் விண்ணப்பங்கள்: இப்போது கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வங்கியின் கிளைக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக, வங்கியின் ஆன்லைன் லோன் போர்ட்டலின் உதவியுடன், உங்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். இந்த வசதி இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதித்துறை நிறுவனங்களால் (NBFC) வழங்கப்படுகிறது. ஏனெனில், இது முழு விண்ணப்ப செயல்முறையையும் விரைவாகச் செய்வதோடு மட்டுமல்லாமல், பேப்பர் மூலம் விண்ணப்பிக்கும் முறையைக் குறைத்து, வங்கியின் கிளையில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் போக்குகிறது.
கடன் தகுதி சோதனைகள்: கடன் வழங்குபவர்கள் இப்போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர், இது தானாகவே உங்கள் சுயவிவரத்தை வைத்து உங்களின் கடன் தகுதியை மதிப்பிட உதவுகிறது. இது உங்களது விண்ணப்பத்தின் ஒப்புதலை விரைவுபடுத்த உதவுகிறது மற்றும் உங்கள் சுயவிவரத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் பரிந்துரையையும் வழங்குகிறது.
இதனுடன், முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியையும் நீங்கள் பெறுவீர்கள். இவ்வாறாக, உடனடி கடன் தகுதி அனுமதியைப் பெறுவதன் மூலம் கடன்களை எளிதாக அணுக முடியும். இந்த முறையின் மூலம், நீங்கள் கடன் பெற தகுதியுடையவரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக ஒப்புதல் பெற்ற சில மணிநேரங்களிலேயே கடனைப் பெறலாம்.
காகிதமற்ற ஆவணங்கள்: வங்கியின் கிளைக்குச் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம், விண்ணப்பப் படிவங்களை நிரப்புதல் மற்றும் ஒவ்வொரு படிக்கும், தனித்தனியான படிவங்களைச் சமர்ப்பித்தல் போன்ற கடினமான செயல்முறையிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். மாறாக, ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வங்கியின் போர்ட்டலில் பதிவேற்றுவதன் மூலம் உங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எளிதாகச் சமர்ப்பிக்கலாம். டிஜிட்டல் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) மூலம் நீங்கள் ஆவணங்களை சில நொடிகளில் சரிபார்க்கலாம் மற்றும் அங்கீகரிக்கலாம், இது உங்களது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சிறந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் தருகிறது.
மொபைல் பயன்பாடுகள்: இப்போது, நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் தொலைபேசி மூலம் தனிநபர் கடனை எளிதாக அணுகலாம் மற்றும் நிர்வகிக்கலாம். ஏறக்குறைய ஒவ்வொரு கடன் வழங்குநரும், மொபைல் நெட்பேங்கிங் செயலியை வழங்குகிறார்கள். இதன் மூலம் உங்கள் மாதாந்திர தவணைகள் மற்றும் செலுத்த வேண்டிய தொகை மற்றும் டாப் அப் மற்றும் கடன் வழங்குபவர் வழங்கும் பிற சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆப்ஸ் உங்களுக்கு ஒரு உள்ளமைக்கப்பட்ட மாதத் தவணைக்கான ஈஎம்ஐ கால்குலேட்டரை வழங்குகிறது, அத்துடன் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையும் வழங்குகிறது. கடன் வழங்குபவர் வழங்கும் சமீபத்திய ஆஃபர்களைப் பற்றிய தகவல்கள் உங்களது ஆப்புக்கு உடனுக்குடன் அனுப்பப்படும், இதன்மூலம் தேவையான தகவலை தெரிந்துகொள்ளலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்.
வாடிக்கையாளர் சேவை: சேட்பாட்கள் மற்றும் 24×7 வாடிக்கையாளர் சேவை மைய உதவியுடன், உங்கள் கேள்விகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பதில்களைப் பெறலாம். சேட்பாட்களில் முன் வடிவமைக்கப்பட்ட பதில்கள் உள்ளன, பெரும்பாலும் அவை உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றன, மேலும் சிக்கல் குறித்த விரிவான தகவலுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்துடன் அது உங்களை விரைவாக இணைக்கலாம் அல்லது அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது கேள்வி அல்லது பிரச்சனைக்கு பதிலளிப்பதற்கான புகார் டிக்கெட்டைப் பெறலாம். இந்த பாட்கள் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுப்பது மட்டுமில்லாமல், கடன் விண்ணப்ப செயல்முறையிலும் உங்களுக்கு உதவி செய்யும்.
இறுதியாக, இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் உண்மையிலேயே நவீன வங்கி முறையை வடிவமைத்துள்ளது மற்றும் நமது நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. இருப்பினும், இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் இதுபோன்ற நடைமுறைகளை பயன்படுத்தி மோசடி கும்பல்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க கவனமாக இருக்க வேண்டும். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதித்துறை நிறுவனங்கள் ஃபோன் அல்லது எஸ்எம்எஸ் மூலம் உங்களது கடவுச்சொற்களையோ, முக்கியமான விவரங்களையோ கேட்காது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் தரவை தெரியாத யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்தவொரு வங்கி நோக்கத்திற்காகவும், பொது நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நெட்வொர்க்குகள் மூலம் ஹேக்கர்கள் அல்லது மோசடி கும்பல்கள் உங்களின் தரவைத் திருடுவதற்கு முயற்சி செய்யலாம். எனவே, மேற்குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம், தொழில்நுட்பத்தின் வசதியை நீங்கள் எளிதாக அனுபவிக்கலாம் மற்றும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம், அத்துடன் கடன்களையும் விரைவாக அணுகலாம்.
January 01, 2025 2:12 PM IST