Last Updated:

இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் தோனிக்கும் தனக்குமான உறவில் விரிசல் அதிகரித்துள்ளதாக கூறினார்.

News18

மகேந்திர சிங் தோனி தம்மிடம் மனம்விட்டு பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இவர், முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு முன், “தோனி அளவுக்கு எந்த ஒரு வீரருக்கும் கேப்டனுக்கும் பிசிசிஐ ஆதரவு கிடைக்கவில்லை. எனக்கும் கிடைக்கவில்லை. அதனால், என் கேரியர் முடிவுக்கு வந்தது. நான் அப்போது பவுலராக நல்ல முன்னேற்றத்தில் இருந்தபோதும் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டேன்.

மற்ற வீரர்களைப் போலல்லாமல், எம்.எஸ். தோனி போர்டில் இருந்து நிகரற்ற ஆதரவை எப்படி அனுபவித்தார். தோனிக்கு மட்டும் நிகரற்ற ஆதரவை கொடுத்துவிட்டு, 2011 உலகக் கோப்பையில் ஆடிய கிரேட் பிளேயர்களை ஏன் ஒழித்தார்கள்?” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் தோனிக்கும் தனக்குமான உறவில் விரிசல் அதிகரித்துள்ளதாக கூறினார்.

Also Read | கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

2018-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாடியபோதும், மைதானத்தில் மட்டுமே தோனியுடன் போட்டி பற்றி பேசியதாகவும் மற்றபடி 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தோனி தன்னிடம் மனம்விட்டு பேசவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார். தோனி தன்னிடம் பேசாமல் போனதற்கு என்ன காரணம் என தனக்கு தெரியவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.



Source link