ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்களை கிரிக்கெட் அணிகள் தற்போது வெளியிட்டுள்ள. சென்னை அணியில் தோனி, ருதுராஜ் உள்பட 5 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இன்று மாலை retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும் என்ற சூழலில், ஒவ்வொரு அணியிலும் தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அணிகள் மற்றும் ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்கள் பின்வருமாறு-

விளம்பரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவிந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, சிவம் துபே

மும்பை இந்தியன்ஸ் – ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, திலக் வர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி, ரஜத் பட்டிதார், யஷ் தயாள்

டெல்லி கேபிடல்ஸ் – அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, ரமன்தீப் சிங்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி,

குஜராத் டைட்டன்ஸ் – ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாரூக்கான்

பஞ்சாப் கிங்ஸ் – ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங்

இதையும் படிங்க – கிரிக்கெட் அணியின் கேப்டன் வீட்டில் திருட்டு… மனைவி, குழந்தைகள் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல், சிம்ரோன் ஹெட்மேயர்,

விளம்பரம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹெய்ன்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட்

.



Source link