தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகர்களில் சிவராஜ்குமார் முக்கியமான நபர். 62 வயதாகும் இவர் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் மிகையாகாது. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றார். ரஜினிக்கு இணையான மாஸ் எண்ட்ரி கொடுத்து அவருக்கான காட்சிகள் வைக்கப்பட்டது. அவர் திரையில் தோன்றும்போது விசில் சத்தம் தெறித்தது. அதைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருக்கிறார்.
இப்படி புகழ் உச்சியில் இருக்கும் சிவராஜ் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்தான் திரைக்கல்வியை முடித்தார். இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். பின் அவர் முதன்முதலின் தெலுகு சினிமாவில்தான் வாய்ப்பு கிடைத்து அறிமுகமானார். ஆனால் அங்கு அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. பின் கன்னடாவில் வாய்ப்பு கிடைக்க அங்கு தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.
தற்போது அடுத்தடுத்து 6 படங்கள் கையில் இருக்கும் நிலையில் உடல் நிலை சரியில்லாததால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கும் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இவர் தற்போது கமிட்டான படங்கள் கைவிடப்படுமா என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டால். அதில்“ நான் நோயால் பாதிக்கப்படிருப்பது உண்மை. அதற்கான சிகிச்சைக்காக நான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால் எனக்கு வந்திருப்பது புற்றுநோய் அல்ல. இன்னும் எனக்கு என்ன நோய் என்பதை நாங்களே கண்டறியவில்லை. எனவே ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம். நான் நலமுடன் வீடு திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்புதான் அவருடைய தம்பியும், பிரபல நடிகருமான புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வெற்றிடமே இன்னும் நிறையாத நிலையில் தற்போது சிவராஜ் குமாருக்கும் இப்படியொரு பிரச்சனையா என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அவர் தன்னுடைய சொத்துக்களை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.
.
- First Published :